தாம்பரம்- நெல்லை இடையே கோடைகால சிறப்பு ரயில் இயக்கம்: முன்பதிவு தொடங்கியது!

By காமதேனு

கோடை விடுமுறையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்கு வருபவர்களுக்கு வசதியாகத் திருநெல்வேலி- சென்னை தாம்பரம் இடையே கோடைகால சிறப்பு ரயில் இயக்கத்திற்கான அறிவிப்பு வந்துள்ளது. இதற்கான முன்பதிவும் இன்றுமுதல் தொடங்கி உள்ளது.

பள்ளிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் கோடைகால விடுமுறை வந்துவிடும். அதனை முன்னிட்டு சென்னையில் இருக்கும் தென்மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு வருவது வழக்கம். அப்படி வருபவர்களின் வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு கோடைகால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆண்டும் இந்த ரயில் சேவையை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, “திருநெல்வேலியில் இருந்து சென்னை, தாம்பரம் நோக்கி ஏப்ரல் மாதம் 2,9,16,23-ம் தேதிகளிலும், மே மாதத்தில் 7,14,21,28 ஆகிய தேதிகளிலும், ஜூன் மாதத்தில் 4,11,18,25-ம் தேதிகளிலும் இயக்கப்படும். அதாவது அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் இரவு 7.20க்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயிலானது மறுநாள் காலை 9.20க்கு சென்னை தாம்பரம் சென்று அடையும்.

இதேபோல் மறுமார்க்கத்தில் ஏப்ரல் மாதம் 3,10,17,24 தேதிகளிலும், மே மாதத்தில் 8,15,22,29 தேதிகளிலும், ஜூன் மாதத்தில் 5,12, 19,26 தேதிகளிலும் அனைத்து திங்கள் கிழமைகளிலும் தாம்பரத்தில் இருந்து இரவு 10.20க்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 10.40க்கு திருநெல்வேலி சென்று சேரும். இந்த ரயிலுக்கான முன்பதிவுகள் இன்றுமுதலே தொடங்கியுள்ளது.

அதேபோல் இந்த ரயிலானது தென்காசி மக்களுக்கும் பயன்பெறும் வகையில் நெல்லையில் இருந்து சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் வழியாக மதுரை சென்று செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE