அக்டோபர் 2-ம் தேதி ஜன் சுராஜ் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்குகிறார் பிரசாந்த் கிஷோர்

By KU BUREAU

புதுடெல்லி: தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அரசியல் வியூகப் பணியில் இருந்து விலகி, பிஹாரில் ‘ஜன் சுராஜ்’ என்கிற அமைப்பை தொடங்கி பாத யாத்திரை மேற்கொண்டார்.

இந்நிலையில் இந்த ஜன் சுராஜ் அமைப்பை புதிய கட்சியாக நேற்று பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். வரும் அக்டோபர் 2-ம் தேதிஇந்த புதிய கட்சி தொடங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்றும்பிரசாந்த் கிஷோர் தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஜன் சுராஜ் கட்சியையார் வழிநடத்துவது, யார் ஒருங்கிணைப்பது போன்ற மற்ற விவரங்கள், உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும்.

கட்சி தொடங்கப்பட்ட பின்னர் மாநிலம் முழுவதும் 8 இடங்களில் கூட்டம் நடத்தப்படும். இந்தக் கூட்டத்தின்போது தொண்டர்கள் கட்சியில் சேர்க்கப்படுவர். மேலும் பிரச்சாரத்துக்காக 1.5 லட்சம் கட்சி நிர்வாகிகள் பணியாற்றுவர். கட்சி தொடங்கப்படும்போது நமதுகட்சியில் ஒரு கோடி உறுப்பினர்கள் இணைந்திருப்பர்.

மாநிலத்தில் உள்ள நிலைமையை மாற்றவேண்டும் என்றுமக்கள் விரும்பினால் எங்கள் ஜன்சுராஜ் அமைப்பின் உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினோம். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

வரும் பேரவைத் தேர்தலில் பிஹாரிலுள்ள 243 தொகுதிகளிலும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளோம்.

பிஹாரின் முகத்தை மாற்றும் முழுமையான திட்டத்துடன் வந்துள்ளோம். வெறும் 20 முதல் 25 இடங்களில் வெற்றி பெறுவது எங்கள் நோக்கமல்ல. அடுத்த 2 ஆண்டுகள் வரை பொறுமையாகக் காத்திருங்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் ஆதரவு: ஜன் சுராஜ் அமைப்பில் பிஹாரின் முக்கிய அரசியல்வாதிகள் சிலர் சமீபத்தில் இணைந்தனர். பிஹார் முன்னாள் அமைச்சர் மோனாசிர் ஹசன், ராஷ்டிரிய ஜனதா தள முன்னாள் எம்எல்சி ராம்பாலி சிங் சந்திரவன்ஷி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆனந்த் மிஸ்ரா, ஐக்கிய ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்பி மங்கனி லால் மண்டலின் மகள் பிரியங்கா ஆகியோர் இந்த அமைப்பில் அண்மையில் இணைந்துள்ளனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE