ஜம்மு காஷ்மீரில் காஷ்மீர் பண்டிட் சுட்டுக்கொலை - தீவிரவாதிகள் வெறிச்செயல்

By காமதேனு

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள உள்ளூர் சந்தைக்கு சென்று கொண்டிருந்தபோது சஞ்சய் சர்மா எனும் காஷ்மீரி பண்டிட் இன்று பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டப்பட்டதில் உயிரிழந்தார்.

புல்வாமாவில் உள்ள அச்சானில் வசிக்கும் காஷ்மீர் பண்டிட் சஞ்சய் ஷர்மா, உள்ளூர் சந்தைக்கு சென்று கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டப்பட்டதில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சஞ்சய் சர்மா வங்கி ஒன்றில் காவலாளியாக பணியாற்றியதாக கூறப்படுகிறது.

"உள்ளூர் சந்தைக்கு செல்லும் வழியில் காஷிநாத் சர்மாவின் மகன் சஞ்சய் சர்மா மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் கொல்லப்பட்டார்" என்று காஷ்மீர் மண்டல காவல்துறை ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சிறுபான்மை சமூகத்தினரின் பாதுகாப்பிற்காக கிராமத்தில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு காஷ்மீர் பண்டிட்டுகள் மீது தொடர்ச்சியான இலக்கு தாக்குதல்கள் நடந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE