குட்கா சோதனையில் கட்டுக் கட்டாக சிக்கிய 70 லட்சம் ஹவாலா பணம்: போலீஸார் அதிர்ச்சி

By காமதேனு

சென்னையில் குட்கா வைத்திருப்பதாக சந்தேகப்பட்டு சோதனை செய்ததில் கட்டுக்கட்டாக ஹவாலா பணம் வைத்திருந்ததை கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னையில் அந்த சாலையில் ஒரு பிரபல ஹோட்டல் எதிரே இருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அருகே போலீஸார் சென்ற போது அந்த மர்மநபர்கள் தப்பி ஓடினர்.

அவர்களில் ஒருவரைப் பிடித்து போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளதா என்று சோதனை செய்தனர். ஆனால். அவரிடம் கட்டுக்கட்டாக பணம் இருந்ததையடுத்து பிடிபட்ட நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

சகாபுதின்

விசாரணையில். அவர் சென்னை ஏழுகிணற்றைச் சேர்ந்த சகாபுதின் (57) என்றும் அவர் வைத்திருந்த கணக்கில் வராத 70 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஹவாலா பணத்தை ஒப்படைத்தனர். சகாபுதினை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய மற்றொருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE