2024-2025 மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்

By KU BUREAU

புதுடெல்லி: 2024-2025ம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:

* உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் பயில ரூ.10 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும்.

* பிஹாரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க ரூ.26 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

* பிஹார் மாநிலத்துக்கு பேரிடர் நிவாரணமாக ரூ.11,500 கோடி நிதி வழங்கப்படும்.

* ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு

* தொழில் துறையுடன் இணைந்து பணிபுரியும் பெண்களுக்கு சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.

* முத்ரா கடன் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்வு

* காசி விஸ்வநாதர் கோயில் உலகத் தரத்தில் மேம்படுத்தப்படும். பிஹார் கயா, புத்தகயா கோயில்கள் மேம்படுத்தப்படும்.

* தொழில் உற்பத்தித் துறையில் முதல் முறை பணிக்கு சேரும் ஊழியர்களுக்கு முதல் மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் நேரடியாக வங்கிக் கணக்கிற்கு வைப்புத் தொகையாக செலுத்தப்படும்.

* அனைத்துத் துறைகளிலும் கூடுதலாக பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி சந்தாவில் ரூ.3000 அரசு செலுத்தும்.

* சோலார் மின் உற்பத்தித் திட்டம் மூலம் 1 கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் அளிக்கப்படும்.

* விண்வெளி திட்டங்களுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகவும், பிளாட்டினத்துக்கு 6.4 சதவீதமாகவும் குறைக்கப்படும்.

* மொபைல் போன், உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி 15 சதவீதமாக குறைக்கப்படும்.

* அறக்கட்டளைகளுக்கு இரண்டு முறையாக இருந்த வரி செலுத்துவது ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே முறையாக மாற்றப்படும்.

* தனி நபர் வருமானத்தில் ரூ.3 லட்சம் வரை வரி கிடையாது. ரூ.3 லட்சம் - ரூ.7 லட்சம் வரை 5 சதவீதம் வரி. ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 10 சதவீதம் வரி. ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15 சதவீதம் வரி. ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20 சதவீதம் வரி. ரூ.15 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE