ராமேஸ்வரம் ரயில்கள் மண்டபத்தில் இருந்து புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

By காமதேனு

பாம்பன் பாலத்தில் ஏற்பட்டுள்ள அதிர்வு காரணமாக ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்கள் மண்டபத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பாம்பன் ரயில் பாலத்தில் சென்னை ஐஐடி நிறுவனம் பொருத்திய கண்காணிப்பு கருவி ரயில்கள் ஓடும்போது பாலத்தில் அதிர்வுகள் அதிகமாக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக ராமேஸ்வரம்- மண்டபம் ரயில் நிலையங்களுக்கு இடையே போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து இன்று (23.12.22) மாலை 6 மணிக்கு புறப்படும் மதுரை விரைவு ரயில் (06656) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இன்று ராமேஸ்வரத்தில் இருந்து முறையே மாலை 04.20, 05.20 மணிக்கு மற்றும் இரவு 08.20, 10.30 மணிக்கு புறப்படும் என்றும் திருப்பதி, சென்னை எழும்பூர் (மெயின் லைன், கார்ட் லைன் ரயில்கள்), ஓஹா விரைவு ரயில்கள் ஆகியவை மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்ததுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE