அசாமில் முஸ்லிம்கள் எண்ணிக்கை 40 சதவீதம்: முதல்வர் சர்மா தகவல்

By KU BUREAU

குவாஹாட்டி: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று கூறியதாவது: மக்கள்தொகையை மாற்றுவது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக எனக்கு மாறியுள்ளது. அசாமில் முஸ்லிம் மக்கள்தொகை என்பது 40 சதவீதமாக உள்ளது.

1951-ல் 12 சதவீதமாக இருந்த முஸ்லிம் மக்கள் எண்ணிக்கை தற்போது 28 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால், தேர்தலில் பல மாவட்டங்களை இழந்துள்ளோம். இவ்வாறு ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக-ஏஜிபி-யுபிபிஎல் கூட்டணி அசாமில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் 11-ல் வெற்றிபெற்றது, 3 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE