போஜ்சாலா வளாகத்தில் 94 உடைந்த சிலைகள் மீட்பு: ஏஎஸ்ஐ ஆய்வறிக்கை தாக்கல்

By KU BUREAU

இந்தூர்: மத்தியபிரதேசம் தார் பகுதியில்11-ம் நூற்றாண்டு வழிபாட்டுத் தலமான போஜ்சாலா-கமல்-மவுலா மசூதி வளாகம் உள்ளது.போஜ் சாலாவை சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாக இந்துக்கள் பார்க்கின்றனர். அதே சமயம் இந்த வளாகத்தை கமல் மவுலா மசூதியாக முஸ்லிம்கள் கருதுகின்றனர்.

இந்தப் பிரச்சினையை சமாளிக்க செவ்வாய்க்கிழமைகளில் இந்துக்கள் வழிபடவும் வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தவும் கடந்த 2003-ல் இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் (ஏஎஸ்ஐ) ஒரு விதி வகுத்தது.

இந்நிலையில் நீதிக்கான இந்து முன்னணி என்ற அமைப்புதொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த வளாகத்தில் ஆய்வுநடத்த ஏஎஸ்ஐ-க்கு ம.பி. உயர்நீதிமன்றத்தின் இந்தூர் அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து ஏஎஸ்ஐ-யின் 2,000 பக்க ஆய்வறிக்கைநேற்று உயர் நீதிமன்றத்தில்சமர்ப்பிக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்கறிஞர் ஹரி ஷங்கர் ஜெயின் கூறும்போது, “அந்த வளாகத்தில் இந்து கோயில் இருந்தது ஏஎஸ்ஐ அறிக்கை மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே அங்கு இந்துக்கள் மட்டுமேபூஜை நடத்த வேண்டும். தொழுகைக்கு அனுமதி அளிக்கும் ஏஎஸ்ஐ-யின் 2003-ம் ஆண்டு உத்தரவு சட்டவிரோதமானது. அந்த வளாகத்தில் இருந்து 94உடைந்த சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றைப் பார்க்கும் எவரும்அங்கு ஒரு கோயில் இருந்ததாக எளிதில் கூறமுடியும்” என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE