உலகின் நம்பர் ஒன் தலைவரான மோடி.. எக்ஸ் தளத்தில் ஃபாலோயர் 100 மில்லியன்

By KU BUREAU

எக்ஸ் சமூக வலைதளத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பின்தொடர்வோர் எண்ணிக்கை 10 கோடியை (100 மில்லியன்) தாண்டியுள்ளது. இதன்மூலம் எக்ஸ் தளத்தில் செல்வாக்கு மிக்க உலக தலைவர்களில் முதலிடத்தை மோடி பிடித்துள்ளார்

பிரதமர் நரேந்திர மோடி அனைத்து சமூக வலைதளங்களிலும் பிரபலமாக உள்ளார். அவருடைய யூடியூபில் சுமார் 2.5 கோடிக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். இதன்மூலம் யூடியூப் சமூக வலைதளத்தில் செல்வாக்கு மிக்க தலைவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார், இந்த நிலையில் எக்ஸ் மளத்தில் அவரை பின் தொடர்வோர் எண்ணிக்கை 10 கோடித் தாண்டியுள்ளது. இதன்மூலம் எக்ஸ் தளத்தில் செல்வாக்கு மிக்க உலக தலைவர்களில் முதலிடம் பிடித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, எக்ஸ் தளத்தில் 3.81 கோடி பேர் பின்தொடர்கின்றனர். துபாய் மன்னர் ஷேக் முகமதுவை 1.12 கோடி பேரும், கத்தோலிக்க மதத் தலைவர் போப் பிரான்சிஸை 1.85 கோடி பேரும் பின்தொடர்கின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை எக்ஸ் தளத்தில் 2.64 கோடி பேரும், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை 2.75 கோடி பேரும், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவை 1.99 கோடி பேரும், மேற்குவங்க முதல்வர் மம்தாவை 74 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை 6.41 கோடி பேரும், பிரேசில் கால்பந்து வீரர் நெய்மரை 6.36 கோடி பேரும், அமெரிக்க கூடைப்பந்து வீரர் லீபிரோன் ஜேம்ஸை 5.29 கோடி பேரும், அமெரிக்க பாப் பாடகி டெய்லர் ஸ்விப்டை 9.53 கோடி பேரும் பின்தொடர்கின்றனர்.

எக்ஸ் தளத்தில் முதலிடம் பிடித்துள்ளது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, "எக்ஸ் தளத்தில் 100 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்றுள்ளேன்.
இந்த துடிப்பான ஊடகத்தில் இருப்பதில் மகிழ்ச்சி. கலந்துரையாடல், விவாதம், ஆழமான புரிதல், மக்களின் ஆசிகள், ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மற்றும் பலவற்றைப் போற்றுகிறேன். எதிர்காலத்திலும் சமமான ஈடுபாட்டுடன் கூடிய நேரத்தை எதிர்நோக்குகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE