ரேஷன் கடைகளில் 4,000 பணியிடத்துக்கு ஆள்சேர்ப்பு; 10, 12-ம் வகுப்பில் பாஸானால் போதும்: விண்ணப்பிப்பது எப்படி?

By காமதேனு

நியாய விலை கடைகளில் விற்பனையாளர்கள், கட்டுநர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் கூட்டுறவு நியாயவிலை கடைகளுக்கான 4 ஆயிரம் விற்பனையாளர்கள், கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரி பார்க்கும் பணிக்கு அதிக அளவில் அலுவலர்கள் தேவைப்படுவார்கள் என்பதால் வருவாய், ஊரக வளர்ச்சித்துறையினரை பயன்படுத்திக் கொள்ள சம்பந்தப்பட்ட துறைகளின் மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும், விற்பனையாளர் பணியிடங்களுக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தகுந்த சான்றிதழ் உடன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE