அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!

By KU BUREAU

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக குற்றம் சாட்டி டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவாலை மார்ச் 11-ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஜூன் 2-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கேஜ்ரிவால், இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்தார்.

இந்நிலையில், இடைக்கால ஜாமீன் நிறைவடைந்ததும் ஜூன் 2-ம் தேதி திகார் சிறையில் அர்விந்த் கேஜ்ரிவால் சரணடைந்தார். அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபங்கர் தத்தா அமர்வு இன்று தீர்ப்பளித்து.

அவர்கள் அளித்த தீர்ப்பில், அர்விந்த் கேஜ்ரிவால் 90 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். அதனால் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிடுகிறோம். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதை நாங்கள் கருத்தில் கொண்டு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE