`போதை பொருள் வழக்குகளை விரைந்து முடிக்கவும்'- அரசு வக்கீல்களுக்கு தலைமை குற்றவியல் வக்கீல் அதிரடி உத்தரவு

By காமதேனு

போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அரசு குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு, தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா உத்தரவிட்டுள்ளார்.

போதைப் பொருள் ஒழிப்பில் சிறப்பு கவனம் செலுத்தி, நடமாட்டத்தை முற்றிலும் தடுத்தாக வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதையொட்டி அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் கூட்டமும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா தலைமையில், தமிழகம் முழுவதும் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரணை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் பங்கேற்று இருந்தனர். அப்போது, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவருவதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பல்வேறு ஆலோசனைகளை வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE