வழக்கறிஞரிடம் இருந்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட 20 ரூபாயை ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் திருப்பி கொடுக்குமாறு ரயில்வே நிர்வாகத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம், மதுரா மாவட்டத்தை சேர்ந்தவர் சதுர்வேதி. வழக்கறிஞரான இவர், 1999-ம் ஆண்டு ரயில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, அவரிடம் 20 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதனை திருப்பி கேட்டுள்ளார் சதுர்வேதி. ஆனால் பணத்தை திருப்பிக் கொடுக்க ரயில்வே ஊழியர் மறுத்துவிட்டார். இதையடுத்து, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் சதுர்வேதி வழக்குத் தொடர்ந்தார். 22 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் தற்போது சதுர்வேதிக்கு நீதி கிடைத்துள்ளது.
வழக்கறிஞரிடம் இருந்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட 20 ரூபாயை ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் திருப்பி கொடுக்குமாறு ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
22 ஆண்டு சட்டப் போராட்டத்திற்கு வழக்கறிஞர் ஒருவருக்கு நீதி கிடைத்துள்ள சம்பவம் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.