அகஸ்தியர் மலைக்கு அசத்தல் செய்தி: உலக யானைகள் தினத்தில் மத்திய அரசின் சிறப்பு அறிவிப்பு!

By காமதேனு

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அகஸ்திய மலையை யானைகள் காப்பகமாக அறிவித்தது மத்திய அரசு.

அகஸ்திய மலையில் 1,197 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள வனப்பகுதி யானைகளுக்கான பாதுகாக்கப்பட்ட காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகஸ்தியர் மலையை யானைகள் காப்பகமாக்கும் அறிவிப்பை இன்று வெளியிட்ட மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், “உலக யானைகள் தினமான இன்று தமிழகத்தில் உள்ள அகஸ்தியர் மலையின் 1,197 சதுர கி.மீ பரப்பளவைச் மேலும் ஒரு யானைகள் காப்பகமாக நிறுவுவதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். யானைகளைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பகுதியாக இது இருக்கும்’ என தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் ஏற்கெனவே நீலகிரி , கோயமுத்தூர், ஆனைமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் 4 யானைகள் காப்பக பகுதிகள் இருக்கும் நிலையில், தற்போது 5 வது யானை காப்பகமாக அகஸ்தியர் மலை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள அகஸ்தியர் மலை, அகத்தியர் மலை என்றும், பொதிகை மலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த 1,866 மீட்டர்கள் உயரமுள்ள இம்மலையிலிருந்துதான் தாமிரபரணி நதி உருவாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE