காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் 3 வீரர்கள், 2 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் தர்ஹால் பகுதியில் பார்கல் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றுள்ளனர். அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்துள்ளனர். அப்போது, திடீரென வீரர்களை நோக்கி அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனை ஜம்மு மண்டலத்திற்கான ஏ.டி.ஜி.பி. முகேஷ் சிங் உறுதிப்படுத்தி உள்ளார்.