உ.பிக்கு ரூ 20,928 கோடி; தமிழகத்துக்கு ரூ.4,758 கோடி: வரி பங்கினை விடுவித்தது மத்திய அரசு!

By காமதேனு

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய வரி பங்கில் ரூ.4,758 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

மத்திய அரசு தொகுப்பில் இருந்து மாநில அரசின் தேவைகளுக்காக தற்போது இரண்டு தவணை வரி பகிர்ந்தளிப்புகள் விடுவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்த மாதத்திற்கான தவணையாக மாநிலங்களுக்கு ரூ.58,332 கோடி வரிபங்கினை விடுவிக்க வேண்டும். ஆனால் தற்போது இரண்டு தவணைகளின் தொகையாக ரூ.1,16,665 கோடியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது.

இந்த நிதிப்பகிர்வின்படி வழங்கப்படும் தொகையானது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும். அதன்படி அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்துக்கு ரூ. 20, 928 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக பிஹாருக்கு ரூ.11,734 கோடியும், மத்திய பிரதேசத்துக்கு ரூ.9,158 கோடியும், மேற்கு வங்கத்துக்கு ரூ.8,776 கோடியும் மகாராஷ்டிராவுக்கு ரூ.7,369 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு தொகுப்பிற்கு கிடைக்கக்கூடிய வரியில் இருந்து, மாநில அரசின் தேவைகள் மற்றும் திட்டங்களுக்கு எவ்வளவு தொகை விடுவிக்க வேண்டும் என்பதை நிதி கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த வரிப்பகிர்வு விடுவிக்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE