மாதவிடாய் காலத்தில் விடுப்பு கட்டாயமாக்கினால் பெண்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும்: உச்ச நீதிமன்றம் கருத்து

By KU BUREAU

புதுடெல்லி: பணியிடங்களில், வேலை செய்யும்பெண்களுக்கு மாத விடாய் கால விடுப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறிய தாவது:

மாதவிடாய் விடுப்பு பெண் களுக்கு வழங்குவதை கட்டாய மாக்குவது அவர்களை நிறுவனங்கள் ஒதுக்கி வைக்க வழி வகுக்கும். இதனால் வேலை வாய்ப்பு பாதிக்கப்படலாம். பெண்களை பாதுகாக்கஎடுக்கும் முயற்சிகள் அவர்களுக்குபாதகமாக அமைய வாய்ப்புகள் உள்ளன. மாதவிடாய் நாட்களில்விடுமுறை அளிப்பதை கட்டாய மாக்கினால் பணியிடங்களில் பெண்களின் வேலைவாய்ப்பு பாதிக்கும்.

மேலும், இது மத்திய அரசின் கொள்கை முடிவு சார்ந்த விவகாரம் என்பதால் இதில் தலையிட விரும்பவில்லை. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தை நாடி இதுதொடர்பான கோரிக்கைகளை மனுதாரர் முன் வைக்கலாம்.

இவ்வாறு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE