வழிமறித்த குற்றவாளிகள்; கொடூரமாக கொல்லப்பட்ட போலீஸ்காரர்: புகார் கொடுத்ததால் நடந்த பயங்கரம்!

By காமதேனு

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கூறிய போலீஸ்காரரை பழைய குற்றவாளிகள் 6பேர் குத்திக் கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம், நந்தியால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேந்திரகுமார்(37). இவர் நந்தியால் காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

இவர் நேற்று நள்ளிரவு பணி முடிந்து டூவீலரில் விடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து ஆட்டோவில் ஏற்றிச் சென்றது. சின்னச்செருவு பகுதிக்கு அழைத்துச் சென்று அவரை அந்த கும்பல் கத்தியால் சரமாரியாக குத்தியது. இதில் சுரேந்திரகுமார் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. ஆட்டோ ஓட்டுநர், உயிருக்குப் போராடிய சுரேந்திரகுமாரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனார். ஆனால், போகும் வழியிலேயே சுரேந்திரகுமார் உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழைய குற்றவாளிகள் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் சுரேந்திரகுமார் புகார் அளித்துள்ளார். அந்த முன்விரோதம் காரணமாக சுரேந்திகுமார் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர். அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். போலீஸ்காரர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE