திடீரென சாலையில் ஓடிய காண்டாமிருகம்; திகைத்து நின்ற மக்கள்: வைரலான ஆச்சர்ய வீடியோ

By காமதேனு

கண்டாமிருகம் ஒன்று சாலையில் சாவகாசமாக ஓடும் வீடியோவை ஒடிசாவை சேர்ந்த ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

வனவிலங்குகள் மனித குடியிருப்புகளில் சுற்றித் திரிவதைப் பார்ப்பது முன்பெல்லாம் அசாதாரணமான காட்சியாக இருக்கும். ஆனால், பல காரணங்களால் வன விலங்குகளின் வாழ்விடங்கள் சுருங்கி வருவதால், விலங்கு-மனித சந்திப்புகள் இப்போதெல்லாம் சாதாரணமாக மாறிவிட்டது. இந்த சூழலில் தற்போது காண்டாமிருகம் ஒன்று தெருவில் நிதானமாக ஓடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒடிசாவை சேர்ந்த ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் பதிவேற்றிய வீடியோ கிளிப்பில், பெரிய காண்டாமிருகம் வீடுகள் மற்றும் கார்களுக்கு மத்தியில் சாலையில் சாதாரணமாக ஓடுகிறது. பொதுமக்கள் காண்டாமிருகத்தை பாதுகாப்பான தூரத்திலிருந்து பார்க்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

இந்த ட்வீட்டில், "காண்டாமிருகத்தின் வாழ்விடம் மனித குடியேற்றமாக மாறும்போது, காண்டாமிருகம் ஒரு நகரத்திற்குள் வழி தவறுகிறது என்று குழப்ப வேண்டாம்" என்று ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ ட்விட்டரில் 48,000 க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோ விலங்கு-மனித மோதல்கள் பற்றிய விவாதத்தையும் எழுப்பியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE