சக ஆசிரியர்கள் போல் கையெழுத்து; போலி ஆவணம் தயாரித்து 54 லட்சம் மோசடி: சகோதரியுடன் சிக்கிய ஆசிரியை

By காமதேனு

திருநெல்வேலியில் கூட்டுறவு சங்கத்தில் போலி ஆவணம் மூலம் 54 லட்சம் மோசடி செய்த ஆசிரியையும், அவருக்கு உடந்தையாக இருந்த சகோதரியும் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், கிளாக்குளத்தைச் சேர்ந்தவர் பேச்சியப்பன்(57). இவர் இங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலைசெய்து வருகிறார். இதே பள்ளிக்கூடத்தில் சேரன்மகாதேவியைச் சேர்ந்த லீனா(57) என்பவரும் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இந்தப்பகுதியில் ஆசிரியர்களுக்கு கடன் வழங்குவதற்கென்றே ஆசிரியர்கள் சிக்கன நாணய கூட்டுறவு கடன் சங்கம் ஒன்று உள்ளது.

இந்த கூட்டுறவு சங்கத்தில் லீனா தன்னோடு பள்ளிக்கூடத்தில் பணிசெய்யும் ஆசிரியர்களின் போலி ஆவணங்களைக் கொடுத்து 54 லட்சம் மோசடியாகக் கடன் பெற்றுள்ளார். இதில் போலியாகக் கையெழுத்தும் போட்டுள்ளார். கடன் பெற்றது தொடர்பாக ஆசிரியர்களின் செல்போனுக்கு மெசேஜ் சென்றது. அதன் மூலமே இந்த மோசடி அம்பலமானது. பாதிக்கப்பட்ட ஆசிரியர் பேச்சியப்பன் இதுகுறித்து, திருநெல்வேலி எஸ்.பி சரவணனிடம் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் முத்து தலைமையில் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில், லீனா, பாளையங்கோட்டையில் இருக்கும் அவரது சகோதரி சலோமி(60) என்பவரோடு சேர்ந்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீஸார் இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE