இலங்கையில் கரோனா மரணங்கள் அதிகரிக்கும்: எச்சரிக்கும் சுகாதாரத்துறை

By காமதேனு

சுகாதாரத்துறையினரால் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால் இலங்கையில் கரோனா எண்ணிக்கை அதிகரிப்பதுடன், இறப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரச்சேவைகள் துறை பொறுப்பாளர் அசேல குணவர்தன கூறுகையில்,” இலங்கையில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, நோயைத் தடுப்பதற்கு பொதுமக்களின் ஆதரவு மிகவும் அவசியம்.

தேவைக்குக்கேற்ப முகக்கவசம் அணிந்து நோய்த்தடுப்பு மருந்துகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். மூன்றாவது மற்றும் நான்காவது தடுப்பூசி போடாதவர்கள் அருகில் உள்ள மருத்துவமனை அல்லது சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகத்திற்குச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போடுவதால், கரோனா மரணத்தை முடிந்தவரை தடுக்க முடியும். எனவே, சிக்கல்கள் மற்றும் இறப்பு அபாயத்தைக் குறைக்க தடுப்பூசி போடுவது முக்கியம்” என்றார்.

“குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE