தங்கம் உட்பட நான்கு பதக்கங்கள்: காமன்வெல்த் பளுதூக்குதலில் அசத்தும் இந்தியா!

By காமதேனு

காமன்வெல்த் போட்டி பளு தூக்குதலில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்றுள்ளார். பளுதூக்குதல் 55 கிலோ எடைப்பிரிவில் பிந்தியா ராணி வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவிற்கு ஒரே நாளில் 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் இந்தியாவின் ஒட்டு மொத்த பதக்க வேட்டை நான்காக அதிகரித்துள்ளது.

பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரில் கடந்த 28ம் தேதி காமன்வெல்த் போட்டிகள் தொடங்கின. தொடக்க நாளில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெற்றன. நேற்று நடைபெற்ற போட்டிகளில் ஆடவர் 55 கிலோ எடைப் பிரிவினருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் சங்கேத் மகாதேவ் சர்கார் வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் இறுதிச் சுற்றில் மொத்தம் ஸ்னாட்ச் மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 248 கிலோ எடை தூக்கி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதைத் தொடர்ந்து ஆடவர் 61 கிலோ பிரிவு பளுதூக்குதலில் இந்திய வீரர் குருராஜா 3வது இடம் பிடித்து வெண்கலத்தைக் கைப்பற்றினார்.

நேற்று நடைபெற்ற மகளிர் 49கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு 201 கிலோ எடையைத் தூக்கி சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார் மீராபாய் சானு. அதேபோல பளுதூக்குதல் 55 கிலோ எடைப்பிரிவில் பிந்தியா ராணி தேவி வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவிற்கு ஒரே நாளில் பளுதூக்குதலில் மட்டும் மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ளன. பதக்கம் வென்றவர்களுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE