இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட முதல் நபர்: முற்றிலுமாக குணமடைந்தார்!

By காமதேனு

இந்தியாவின் முதன் முதலாக குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த நபர் அந்த நோயிலிருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே குரங்கு அம்மையின் முதல் பாதிப்பு என்பதால், தேசிய வைராலஜி நிறுவனத்தின் அறிவுறுத்தல்களின்படி 72 மணிநேர இடைவெளியில் பாதிக்கப்பட்ட நபருக்கு இரண்டு முறை சோதனைகள் நடத்தப்பட்டன. " இரு முறை எடுக்கப்பட்ட மாதிரிகளும் எதிர்மறையாக இருந்தன. நோயாளி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்கிறார். தோல் புடைப்புகள் முற்றிலும் குணமாகிவிட்டன. அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" என்று அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.

மேலும், அவருடன் முதன்மை தொடர்பு பட்டியலில் இருந்த அவரது குடும்ப உறுப்பினர்களின் சோதனை முடிவுகளும் எதிர்மறையாக இருப்பதாக அமைச்சர் கூறினார்.

வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்குத் திரும்பிய கொல்லத்தைச் சேர்ந்த இந்த நபர், குரங்கு அம்மை அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூலை 14 அன்று அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE