செஸ் ஒலிம்பியாட் போட்டியில் களமிறங்கும் நிறைமாத கர்ப்பிணி: சாதிப்பாரா இந்திய வீராங்கனை?

By காமதேனு

மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பில் நிறைமாத கர்ப்பிணியான ஹரிகா துரோணவள்ளி பங்கேற்கிறார்.

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை மறுநாள் (ஜூலை 28) தொடங்கி, ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 186 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த போட்டி குறித்து மாநிலம் முழுவதும் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த போட்டியில் இந்தியா சார்பில் நிறைமாத கர்ப்பிணியான ஹரிகா துரோணவள்ளி பங்கேற்கிறார். ஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்த இவர் 9 வயதில் தேசிய செஸ் போட்டியில் பங்கேற்றார்.10 வயதில் தேசிய செஸ் போட்டியில் பதக்கம் வென்றார். 2008-ம் ஆண்டு அர்ஜூனா விருதைப் பெற்றார். 2012,2015,2017ம் ஆண்டுகளில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று ஹரிகா வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளார்.

இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பில் ஹரிகா துரோணவள்ளி பங்கேற்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE