நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கீழக்கரை சென்றுகொண்டிருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செல்லும் வழியில் ஆர்.எஸ். மடையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் திடீரென உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டார்.
வளர்ச்சியில் முன்னுரிமை பெறும் மாவட்டங்களில் சிறப்பு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்டத்தை ராமநாதபுரத்தில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். கீழக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, நிகழ்ச்சிக்கு சென்றுகொண்டிருந்த அமைச்சர், திடீரென ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ். மடையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியினுள் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், அப்பள்ளியில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருகிறார்களா என்றும் பள்ளியின் கட்டமைப்பு மற்றும் மாணவ- மாணவிகளுக்கு கற்றுக் கொடுக்கும் ஸ்மார்ட் வகுப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அது மட்டுமல்லாமல் அவர் மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனிக்கவும் செய்தார். ஆய்வுக்கு பின்னர், நிகழ்ச்சிக்காக கீழக்கரை தனியார் கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றார்.