பக்தர்களே உங்களுக்கு வந்துவிட்டது `ஆடி அம்மன் ஆன்மிக சுற்றுலா’- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிமுகம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தமிழகத்தில் மதுரை, சென்னை, திருச்சி மற்றும் தஞ்சாவூரில் உள்ள கோயில்களை சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் சுற்றிப்பார்க்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துறை சார்பில் ‘ஆடி அம்மன் ஆன்மிக சுற்றுலா’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுறு்றுலாத்துறையை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகமும், இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து ஆன்மிக பயணிகள் பயன்பெறும் வகையில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் ‘ஒரு நாள் ஆடி அம்மன் ஆன்மிக சுற்றுலா’வுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதாவது ஒரு நாள் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இந்த திருக்கோயில் சென்று சாமி தரிசனம் செய்யலாம். இந்த புதிய ஆன்மிக சுற்றுலா திட்டம் கடந்த 17-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், "இந்த புதிய ஆன்மிக சுற்றுலாத் திட்டத்தில் மதுரையில், மதுரை அழகர் கோயில் சாலையில் இருந்து அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில், மதுரை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், வண்டியூர் காளியம்மன் திருக்கோயில், மடப்புரம் அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில், விட்டனேரி-அருள்மிகு முத்து அம்மன் திருக்கோயில், அழகர் கோயில், தாயமங்கலம் அருள்மிகு ராக்காயி அம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களை கண்டு தரிசனம் செய்யலாம்.

இந்த சுற்றுலாவில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு அனைத்து கோயில்களிலும் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்து. இதுபோல் திருச்சி, தஞ்சாவூர், சென்னை நகரங்களில் உள்ள கோயில்களுக்கும் செல்வதற்கு அந்தந்த சுற்றுலாத்துறை சார்பில் ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது. இச்சுற்றுலாவிற்கான கட்டணம் ரூ.900 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சுற்றுலா பயணிகள் ஆன்மிக பக்தர்கள் இந்த அரிய சுற்றுலா வாயப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சுற்றுலாவிற்கு இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9176995841, 044-25333333, 044-25333444 ஆகிய எண்களில் சுற்றுலா வளர்ச்சி கழகத் துறையை தொடர்பு கொள்ளலாம்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE