ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் கார் வேண்டுமா?: இணையத்தில் படத்தைக் காட்டி முதியவரிடம் 13 லட்சத்தை சுருட்டிய கும்பல்

By காமதேனு

இணையத்தில் வெளிநாட்டுக்காரின் புகைப்படத்தைக் காட்டி, திருநெல்வேலியைச் சேர்ந்த முதியவரிடம் 13 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்தவர் செல்வநாயகம்(74). இவர் தனியார் பள்ளி ஒன்றில் தலைமையாசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். இவர் இணையத்தில் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் கார் தங்களிடம் உள்ளது. தேவைப்படுவோர் அணுகலாம் என்னும் விளம்பரத்தைப் பார்த்தார்.

வெளிநாட்டு எலக்ட்ரிக் கார் என பார்த்ததும் செல்வநாயகம் அதை வாங்க நினைத்தார். செல்வநாயகம், இணைய விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்ணுக்குத் தொடர்புகொண்டார். உடனே அவருக்கு கூடுதல் புகைப்படங்களை அனுப்பிவைத்தவர்கள் காருக்கு முன்பணம் கட்ட வேண்டும் எனவும் தெரிவித்தன்னர். தொடர்ந்து ஏழு தவணையாக அவரிடம் இருந்து 13 லட்சத்தை பெற்றனர். திடீரென கார் விற்பனை விளம்பரத்தில் இடம் பெற்றிருந்த செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் இதுகுறித்து விசாரணையில் இறங்கிய போதுதான் தான் ஏமாற்றப்பட்டதையும் உணர்ந்தார். இதுகுறித்து செல்வநாயகம் கொடுத்த புகாரின்பேரில், சைபர் கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE