நாட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை?- மத்திய சட்ட அமைச்சகம் புதுத் தகவல்!

By காமதேனு

இந்தியா முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் 4 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், நாடுமுழுவதும் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களில் சுமார் 59.5 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது.

மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், `உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 1-ம் தேதி கணக்குப்படி 72 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் 42 ஆயிரம் வழக்குகள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது. ஜூலை 15-ம் தேதி நிலவரப்படி மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் 5,300க்கும் மேற்பட்ட நீதித்துறை அதிகாரி பணியிடங்கள் காலியாக இருக்கிறது. மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காகக் கடந்த ஆண்டு சுமார் 39.96 கோடியை மத்திய அரசு செலவிட்டுள்ளது. மேலும் இ-கோர்ட்டுகளுக்கு 98.3 கோடி செலவிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் இல்லை. மத்திய அரசு அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் பொதுமக்களின் கருத்துகளுக்கான சட்ட வரைவுகளை வெளியிடும் கொள்கை மத்திய அரசிடம் இல்லை. பல்வேறு மாநில அரசுகள் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாததால் அகில இந்திய நீதித்துறை சேவைகள் கொண்டுவர எந்த முன்மொழிவும் தங்களிடம் இல்லை' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE