கேரளாவில் ஏகே 47 துப்பாக்கிகள், 300 கிலோ ஹெராயின் கடத்தல் வழக்கு: சென்னை, திருச்சியில் 20 இடங்களில் என்ஐஏ சோதனை

By ரஜினி

சென்னை, திருச்சியில் 20 இடங்களில் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் கடந்த ஆண்டு சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 5 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 300 கிலோ ஹெராயின், ஆயிரம் தோட்டாக்கள் ஆகியவற்றை கடலோரப் பாதுகாப்படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த கடத்தில் ஈடுபட்டதாக இலங்கையைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு கடந்த ஆண்டு மே மாதம் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து சுரேஷ், சௌந்தர்ராஜன் ஆகிய இருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து சென்னை உட்பட பல மாவட்டங்களில் என்ஐஏ நடத்திய சோதனையில் சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த சத்குணம்(எ) சபேசன் என்ற இலங்கைத் தமிழர் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து விடுதலை புலிகள் இயக்கம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள், சிம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் சென்னையில் 9 இடங்களிலும் திருச்சியில் 11 இடங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE