கரடி தாக்கியதில் ஊழியர் படுகாயம்: பெங்களூரு தேசிய உயிரியல் பூங்காவில் பரபரப்பு

By KU BUREAU

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள பன்னர்கட்டா தேசிய உயிரியல் பூங்காவில் சஃபாரியின் போது, ​​கரடி ஒன்று ஊழியரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் பன்னர்கட்டா தேசிய உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு நாகப்பாம்பு, சிறுத்தை, முதலை, கரடி, மான் மற்றும் பல்வேறு விதமான பறவைகள் உள்ளன. இந்த பூங்காவிற்குள் 5 ஹெக்டேர் பரப்பளவில் 19 சிங்கங்கள் உள்ளன. லயன் சஃபாரியின் போது அந்த சிங்கங்களை அருகில் இருந்து பார்க்கலாம். மேலும் பூங்காவில் 7 வெள்ளைப்புலிகள் உட்பட 33 புலிகள் உள்ளன. இப்பூங்காவில் 7.5 ஏக்கர் பரப்பளவில் பட்டாம்பூச்சி பூங்கா, பட்டாம்பூச்சிகள் காப்பகம், அருங்காட்சியகம், ஆராய்ச்சி கூடம் ஆகியவையும் உள்ளன. மேலும், இங்கு 48 வகையான பட்டாம்பூச்சிகள் காணப்படுகின்றன.

இந்த பூங்காவில் கடந்த இருபது ஆண்டுகளாக பெட்டப்பா என்பவர் சஃபாரி கேட் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவர், சஃபாரி கேட்டை இன்று இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது கரடி ஒன்று திடீரென அவரைத் தாக்கியது. இதில் பெத்தப்பா படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவமனையில் அவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பன்னர்கட்டா உயிரியல் பூங்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE