சபரிமலை கோயிலில் நாளை நடை திறப்பு: பக்தர்களுக்கான வழிகாட்டுதல் வெளியீடு!

By காமதேனு

ஆடி மாத சிறப்புப் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளுமாறும், முகக்கவசம் அணிந்து வருமாறும் தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை நாளை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அன்றைய தினம், மற்ற சிறப்புப் பூஜைகள் நடைபெறாது என்பதால் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. மறுநாளான ஞாயிற்றுக் கிழமை முதல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். வழக்கமான பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.

இரவு 10 மணிக்கு வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 5 நாட்கள் நடைபெறும் ஆடி மாத சிறப்புப் பூஜை, வழிபாடுகளுக்கு வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் உடனடி தரிசன முன்பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரத் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE