`29.5 கோடியை ஏழு நாட்களுக்குள் செலுத்த வேண்டும்'- தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய டோல்கேட் நிர்வாகம்!

By மு.அஹமது அலி

கப்பலுார் சுங்கச்சாவடியை அரசு பேருந்துகள் பயன்படுத்தியதற்காக 29.5 கோடி தமிழக அரசு செலுத்த வேண்டும் என்று கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்துள்ள கப்பலுார் சுங்கச்சாவடியை நீக்க வேண்டும் என்றும், உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாகவும் ஏற்கெனவே பிரச்சினை நீடிக்கிறது. முற்றிலுமாக கட்டண விலக்கு அளிக்க வேண்டும் அல்லது சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வேண்டும் என 12 ஆண்டுகளுக்கும் மேலாக திருமங்கலம், கப்பலுார், டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதி வாகன ஓட்டிகள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், சுங்கச்சாவடியை பயன்படுத்திய மதுரை டவுன் பேருந்துகள் மற்றும் 2020 - 22 மே வரை மதுரை - செங்கோட்டை ரோட்டில் சென்ற அரசு பஸ்கள் மொத்தம் 29.5 கோடி கட்டணத்தை 7 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழகத்திற்கு சுங்கச்சாவடி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கெனவே, போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், அளவுக்கு அதிகமான கட்டணத்தை எப்படி செலுத்துவது என அதிகாரிகள் விழி பிதுங்கி உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE