நெல்லை குவாரிகளில் கனிம வளக்கொள்ளை: ஏன் தடை விதிக்கக்கூடாது என கலெக்டர் அதிரடி நோட்டீஸ்

By காமதேனு

திருநெல்வேலியில் அண்மையில் நடைபெற்ற கல்குவாரி விபத்தில் தொழிலாளர்கள் உயிர் இழந்தனர். இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் இருக்கும் அனைத்துக் குவாரிகளிலும் ஆய்வு செய்து அறிக்கைதர ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதில் அனைத்து குவாரிகளிலுமே விதிமீறலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

நெல்லை ஆட்சியர் விஷ்ணு.

திருநெல்வேலி மாவட்டம், அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. கடந்த 14-ம் தேதி இரவு 350 அடி ஆழம் கொண்ட இந்தக் கல்குவாரியில் கற்களை அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுவந்தபோது பாறைகள் சரிந்து விழுந்தன. இந்தக் கோர விபத்தில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 54 குவாரிகளையும் ஆய்வுசெய்து அறிக்கை தர நெல்லை ஆட்சியர் விஷ்ணு கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 54 குவாரிகளுக்கு அனுமதி பெறப்பட்டிருந்தது. அதில் ஒரு குவாரி மட்டும் இப்போது இயங்கவில்லை. மீதமுள்ள 53 குவாரிகளிலும் விதிமீறல்கள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அளவுக்கு அதிகமாக கனிமவளங்களை வெட்டிக் கொள்ளையடித்த 35-க்கும் அதிகமான குவாரிகளுக்கு மொத்தமாக 300 கோடிக்கு அபராதமும், 13 குவாரிகளின் விதிமீறலை மதிப்பிட்டு செயல்பட ஏன் தடைவிதிக்கக்கூடாது? என விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE