அதிகாலையில் அடுத்தடுத்த நிலநடுக்கம்: கர்நாடக கிராமங்களில் மக்கள் பீதி

By காமதேனு

கர்நாடகாவில் இன்று அதிகாலை பல்வேறு கிராமங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் கடந்த 15 நாட்களில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இரண்டு முறை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகி உள்ளது. காலை 6.22க்கு என்ற ரிக்டர் அளவிலும், 6.24க்கு என்ற ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 7.5க்கு மேல் பதிவாகினால் மட்டுமே பாதிப்பு அதிகளவில் இருக்கக்கூடும் என்று பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், தொடர் நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியும், பீதியும் அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE