ஹலோ கிளி ஜோசியக்காரர்களைப் பார்த்தீர்களா?: வலை வீசி தேடும் வனத்துறை

By காமதேனு

மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளிடம் கிளி ஜோசியத்தில் ஈடுபட்ட 7 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரை சாலை, அர்ச்சுணன் தபசு, ஐந்துரதம் மற்றும் கோவளம் கடற்கரை பகுதிகளில் காடுகள், வயல்வெளிகள், தோட்டங்களில் அதிக அளவு கிளிகள் உள்ளன. இவற்றைப் பிடித்து இறக்கைகளை வெட்டி மரக்கூண்டுகளில் அடைத்து கிளிஜோசியக்காரர்கள் துன்புறுத்துவதாக செங்கல்பட்டு மாவட்ட வனத்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

இந்த நிலையில், திருப்போரூர் வனச்சரக அலுவலர் கல்யாண் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் குழு மாமல்லபுரத்தில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது சுற்றுலாப் பயணிகளிடம் சாலையோரம் அமர்ந்து ஜோசியம் பார்த்துக் கொண்டிந்த 7 ஜோசியக்காரர்களை கைது செய்தனர். வன உயிரின சட்டத்தை மீறி கிளிகளின் இறக்கைகளை வெட்டி மரக்கூண்டுகளில் அடைத்து வைத்த அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE