ஆற்றில் திடீர் வெள்ளம்...சுற்றுலா பயணிகளுடன் கவிழ்ந்த கார்: உயிர்களை குடித்த கோர விபத்து!

By காமதேனு

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள தேலா ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கார் ஒன்று அடித்து செல்லப்பட்டதில் 9 பேர் உயிரிழந்தனர், ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பல்வேறு இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் ராம்நகரில் உள்ள நைனிடாலில் இன்று அதிகாலையில் பெய்த அதிகனமழை காரணமாக தேலா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றில் அதிவேகத்தில் நீரோட்டம் இருந்த தால் பஞ்சாபில் இருந்து சுற்றுலா பயணிகளுடன் வந்த கார் ஒன்று நீரில் இழுத்து செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து பேசிய குமாவோன் ரேஞ்ச் டிஐஜி ஆனந்த் பரன், “கடும் நீரோட்டத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டதில், பஞ்சாபைச் சேர்ந்த ஒன்பது சுற்றுலாப் பயணிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதில் நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஐந்து பேர் காரில் சிக்கியுள்ளனர். ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது” என தெரிவித்தார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE