தோட்டத்திற்குள் இயங்கிய போலி மதுபான ஆலை: ரெய்டில் போலீஸார் அதிர்ச்சி

By காமதேனு

சிவகங்கை மாவட்டத்தில் தோட்டத்திற்குள் போலி மதுபானம் காய்ச்சி வந்த மூன்று பேரை காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.

சமீப காலங்களாக விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் போலி மதுபான புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையறிந்த காவல்துறையினர், அவை எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்க விசாரணையை துவங்கினர்.

போலி மதுபான ஸ்டிக்கர்கள்

அதன்படி, சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகில் உள்ள சிவலிங்கபுரத்தில் ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் போலி மதுபான தொழிற்சாலை இயங்குவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து உடனடியாக அங்கு விரைந்த காவல்துறையினர், ஆய்வு மேற்கொண்டனர். அதில், தோட்டத்தில் போலி மதுபானங்கள் தயாரித்ததை காவல்துறையினர் உறுதி செய்தனர். தொடர்ந்து, அங்கிருந்த ராஜேந்திரன், புதுக்கோட்டையைச் சேர்ந்த மாரிமுத்து, புதுச்சேரியைச் சேர்ந்த ராம்குமார் ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும், போலி மதுபானங்கள் தயாரிக்க வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கூடுதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE