பார்த்ததும் ஓட்டம்... விரட்டிப்பிடித்தது போலீஸ்: கோணிப்பையை பார்த்தபோது அதிர்ச்சி

By காமதேனு

தஞ்சாவூர் அருகே பழங்கால உலோகச் சிலைகளை வைத்திருந்த இருவர், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பாவை விளக்கு

தஞ்சாவூர்- சென்னை சாலையில் ராம்நகர் என்ற இடத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் இன்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்திருக்கின்றனர். அவர்களை விரட்டிப் பிடித்து போலீஸார் விசாரித்தனர்.

அப்போது அவர்களை சோதனையிட்டபோது அவர்கள் கோணிப்பையில் மறைத்து வைத்திருந்த உலோக சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. உலோகத்தால் ஆன நாகலிங்க சிலை மற்றும் அம்மன் சிலை ஆகியவற்றுடன் ஒரு பாவை விளக்கு என மொத்தம் மூன்று உலோகச் சிலைகள் அந்த கோணிப்பையில் வைக்கப்பட்டிருந்தன.

நாகலிங்கம் சிலை

தேனாம்படுகை கிருஷ்ணமூர்த்தி மகன் குருசேவ் (43), கொரநாட்டு கருப்பு செல்வராஜ் மகன் பவுன்ராஜ் (36) ஆகிய அவர்கள் இருவரும் எங்காவது ஒரு கோயிலில் இவைகளை திருடி, அவற்றை விற்பதற்கு எடுத்துச் சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்களை போலீஸார் கைது செய்து, சிலைகளையும் , அவர்களையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதியப்பட்டு, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE