`மத உணர்வுகளை புண்படுத்தி விட்டார்'- லீனா மணிமேகலை மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு!

By காமதேனு

ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கவிஞர், ஆவணப்பட இயக்குநர், திரைப்பட இயக்குநர் என பன்முகம் கொண்ட லீனா மணிமேகலை, பாலியல் - சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் ஈழப்போராட்டங்கள் குறித்தும் திரைப்படங்களையும், ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். லீனா மணிமேகலை தனது சமீபத்திய படமான காளி போஸ்டரால் சட்டப்பூர்வ புகாரை எதிர்கொண்டுள்ளார். காளி என்ற படத்தின் போஸ்டர் ட்விட்டரில் டிரெண்டானதுதான். அதில் ஒரு பெண், இந்து தெய்வமான காளி போல் உடையணிந்து, சிகரெட் புகைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டல், காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், இந்து தெய்வத்தை அவமதித்ததாகவும் தங்கள் மத உணர்வுகளை லீனா மணிமேகலை புண்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்து மதத்தை அவமதிக்கும் லீனா மணிமேகலையை உடனடியாக கைது செய்ய வேண்டும் என 'ArrestLeenaManimekalai' என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் டிரெண்டானது. குறிப்பாக பாஜகவினர் இந்த விவகாரத்தில் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், லீனா மணிமேகலை மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE