`அவர்களை மிகவும் கொச்சையாக பேசி வருகிறார்'- யூடியூபர் பாரிசாலன் மீது திருநங்கை ஜெஸ்ஸி அரோரா புகார்

By காமதேனு

"LGBT மக்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. அவர்களை சக மனிதனாக பாருங்கள்" என சமூக ஆர்வலரும் திருநங்கையுமான ஜெஸ்ஸி அரோரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை அய்யப்பன் தாங்கலை சேர்ந்த சமூக ஆர்வலரும் திருநங்கையுமான ஜெஸ்ஸி அரோரா, காவல் ஆணையர் அலுவலகத்தில் யூடியூபர் பாரிசாலன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருநங்கை ஜெஸ்ஸி அரோரா, கடந்த வாரம் LGBT மக்கள் சுயமரியாதை பேரணி ஒன்றை நடத்தினர். அந்த பேரணியை திமுக எம்.பி தமிழச்சி தங்க பாண்டியன் தொடங்கி வைத்தார். இந்த பேரணியை தவறாக புரிந்து கொண்ட யூடியூபர் பாரிசாலன் செங்கோல் என்ற யூடியூப் சேனலில் LGBTQ மக்களை மிகவும் கொச்சையாக பேசியிருப்பது கண்டிக்கதக்கது. LGBT மக்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர்களால் சமுதாயத்துடன் சார்ந்து வாழ முடியாது எனவும் தனி மனித உரிமையை பறிக்கும் வகையில் பாரிசாலன் பேசியிருக்கிறார்.

தமிழக அரசு தங்களுக்கு வழங்கியுள்ள பல உரிமைகளை, சலுகைகள் என கேவலப்படுத்தும் வகையில் கூறியது ஏற்கத்தக்கது அல்ல. இவ்வாறு LGBT மக்களை தொடர்ந்து அவதூறாக பேசி வரும் யூடியூபர் பாரிசாலன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்.LGBT மக்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களை சக மனிதர்களாக பார்க்க வேண்டும்'' என கேட்டுக்கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE