10-ம் வகுப்பு மாணவி 4 மாத கர்ப்பம்… கருவைக் கலைக்க முயன்ற போலி டாக்டர்: வாலிபரின் செயலால் நடந்த விபரீதம்!

By காமதேனு

கருக்கலைப்பால் 10-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவத்தில் போலி பெண் மருத்துவர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், மலையனூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(27). கூலித்தொழிலாளியான இவர் அரசு பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவியுடன் நெருங்கி பழகியுள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பமடைந்துள்ளார். இதனால் மாத்திரையைக் கொடுத்து அந்தக் கர்ப்பத்தை முருகன் கலைத்துள்ளார்.

இந்த நிலையில் மாணவி மீண்டும் கர்ப்பமானார். அந்த கர்ப்பத்தைக் கலைக்க மலையனூர் செக்கடி கிராமத்தைச் சேர்ந்த பிரபுவின் உதவியை முருகன் நாடியுள்ளார். அவர் வீட்டில் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் காந்தி(65) என்ற பெண்ணிடம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக காந்தி கூறியுள்ளார். அவரின் கருவைக் கலைக்க கடந்த 2 நாட்களாக அவருக்கு ஊசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பேக்கரி அருகே நேற்று நடந்த வந்த மாணவி மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தானிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், அவர் 4 மாத கர்ப்பிணியாக இருப்பதையும் உறுதி செய்தனர்.

இதையடுத்து மாணவியின் தந்தை, தானிப்பாடி போலீஸில் புகார் செய்தார். அதில் தனது மகளை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியவர், கருக்கலைப்பு செய்து கொலை செய்த வர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மாணவி கர்ப்பிணியாக இருந்தது உறுதி செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து முருகன், அவருக்கு துணையாக இருந்த பிரபு ஆகிய இருவரையும் தானிப்பாடி சிறப்பு எஸ்ஐ முரளிதரன் கைது செய்தார். மேலும் தலைமறைவாக இருந்த போலி மருத்துவர் காந்தியை போலீஸார் இன்று கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE