இலங்கையின் இன்னல் தீவிரமடைகிறது: இன்று முதல் தனியார் பஸ்கள் நிறுத்தம்

By காமதேனு

எரிபொருள் இல்லாத காரணத்தால் இலங்கையில் தனியார் பேருந்து சேவை இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வேலையிழந்து பலர் பட்டினியால் தவித்து வருகின்றனர். கடுமையான தட்டுப்பாட்டால் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் தனியார் பேருந்து சேவைகள் இன்று முதல் முழுமையாக முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எரிபொருள் இல்லாத காரணத்தால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக இச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். தனியார் பேருந்து சேவை பாதிப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE