பள்ளி வாட்ஸ்அப் குழுவுக்கு வந்த ஆபாச வீடியோ: ஆறாம் வகுப்பு மாணவனின் செயலால் பதறிய ஆசிரியர்கள்

By காமதேனு

டெல்லி அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் வீட்டுப் பாடங்களைப் பகிர்வதற்காக இயங்கிவரும் வாட்ஸ்அப் குழுவில் ஆபாசமான வீடியோ கிளிப்பை பகிர்ந்ததாகக் கூறி டெல்லி காவல்துறை எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக பேசிய டெல்லியின் வடகிழக்கு மாவட்ட டிசிபி ​​சஞ்சய் குமார் சைன், “சில நாட்களுக்கு முன், 6ம் வகுப்பு மாணவர் ஒருவர் பள்ளியின் வாட்ஸ்அப் குழுவில் ஆபாசமான வீடியோ கிளிப்பைப் பகிர்ந்ததாகவும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளியின் முதல்வர் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து இது குறித்து எப்ஐஆர் பதிவுசெய்யப்பட்டது" என தெரிவித்தார்.

அதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட அந்த மாணவருக்கு போலீஸார் தரப்பிலிருந்து கவுன்சிலிங் வழங்கப்பட்டது. மேலும், பள்ளியில் உள்ள மற்ற அனைத்து மாணவர்களுக்கும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE