மாஸ்க்கை சுத்தமாக மறந்துவிட்டனர்... குமரியில் குழந்தைகளை தாக்கும் கரோனா: சுகாதாரத்துறை அலர்ட்

By காமதேனு

குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கரோனா வைரஸ் தொற்று மிகவேகமாகப் பரவிவருகிறது. இன்று ஒரேநாளில் 7 குழந்தைகளுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே கரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. நேற்று மதியம் முதல் இன்று மதியம் வரை 851 பேர் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்தனர். இதில் 60 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதில் 22 பேர் ஆண்கள், 38 பேர் பெண்கள், இதில் ஏழுபேர் குழந்தைகள் ஆவார்கள். குமரி மாவட்டத்தில் கடந்த 21 நாளில் கரோனா வைரஸ்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 380 யைத் தாண்டியுள்ளது.

மக்கள் பலரும் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டிருப்பதால் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேரும் அவசியம் ஏற்படவில்லை. பலரும், வீட்டுச் சிகிச்சையிலேயே இருக்கின்றனர். அதேபோல் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களும் செலுத்திக்கொள்ள சுகாதாரத்துறை பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இதுஒருபுறம் இருக்க, இன்னொரு புறத்தில், மக்கள் மாஸ்க், சமூக இடைவெளி ஆகியவற்றை சுத்தமாக மறந்துவிட்டனர். அதையும் மீண்டும் பின்பற்ற வேண்டும் எனவும் சுகாதாரத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE