அடுத்த ஆண்டு வரை டெல்லிக்குள் கனரக வாகனங்கள் செல்ல முடியாது: அரசின் திடீர் தடைக்குக் காரணம் என்ன?

By காமதேனு

காற்று மாசுபடுவதைத் தடுக்க டெல்லிக்குள் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கனரக வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய வரும் அக்டோபர் 1- ம் தேதி முதல் 2023 பிப்ரவரி 28-ம் தேதி வரை தடை விதித்து டெல்லி அரசு உத்தரவிட்டது. குளிர்காலங்களில் அதிகரிக்கும் காற்றுமாசுபாட்டை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE