பயணிகளின் கனிவான கவனத்துக்கு: நாளை 3 ரயில்களின் சேவை ரத்து!

By காமதேனு

நாகர்கோவில்-திருவனந்தபுரம் வழித்தடத்தில் நேமம்-நெய்யாற்றங்கரை இடையே தண்டவாளப் பராமரிப்புப் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகளின் காரணமாக இந்த வழித்தடத்தில் நாளை செல்லும் 3 ரயில்கள் முற்றாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் பயண தூரம் குறைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நேமம்- நெய்யாற்றங்கரை வழித்தடத்தில் சனிக்கிழமை பெரும்பான்மை இடங்களில் தண்டவாளப் பணி நடைபெறுகிறது. இதனால் நாளை நாகர்கோவில்- கொல்லம் பயணிகள் ரயில்(06426), கொல்லம்- நாகர்கோவில் பயணிகள் ரயில்(06427), திருவனந்தபுரம்- நாகர்கோவில் பயணிகள் ரயில்(06433) ஆகிய 3 ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் நாகர்கோவிலில் இருந்து கோட்டயம் வரை செல்லும் முன்பதிவில்லாத விரைவு ரயில் (16366) நாகர்கோவிலுக்குப் பதிலாக நாளை ஒருநாள் மட்டும் திருவனந்தபுரத்தில் இருந்து கோட்டயம் வரை இயக்கப்படும். இதேபோல் இன்று மதுரையில் இருந்து புனலூர் வரை செல்லும் ரயில் திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும். நாளை இந்த ரயிலும் திருநெல்வேலி- புனலூர் இடையே ரத்து செய்யப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE