நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
நடப்பாண்டுக்கான நீட் தேர்வு 13 மொழிகளில் ஜூலை 17-ம் தேதி நடைபெறவுள்ளது. நீட் தேர்வு எழுத 18 லட்சத்து 72,339 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 42,286 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய மே 24 முதல் 27-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர், ஜூன் 14 முதல் 16-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
அதன்படி இன்றுடன் அவகாசம் முடிவடைகிறது. எனவே விருப்பமுள்ளவர்கள் http://neet.nta.nic.in என்ற வலைதளம் வழியாக துரிதமாக திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஹால்டிக்கெட் பெறுதல் உள்ளிட்டவை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூடுதல் தகவல்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறியலாம் என்றும் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என்றும் என்டிஏ தெரிவித்துள்ளது.