2 வயது சிறுமியை அறைந்து தலைமுடியை இழுத்து தாக்கும் பணிப்பெண்: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

By காமதேனு

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இரண்டு வயது குழந்தையை, பெற்றோர் இல்லாத நேரத்தில் அடித்து துன்புறுத்திய பராமரிப்பு பெண் சிசிடிவி கேமரா மூலம் சிக்கினார்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பெற்றோர் புகார் அளித்ததில் 30 வயதான ரஜ்னி சவுத்ரி என்ற குழந்தை பராமரிப்பாளர் கைது செய்யப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக வெளியான வீடியோ கிளிப்பில், பராமரிப்பு பெண் குழந்தையை அறைவதும், தலைமுடியை இழுத்து தாக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

பாதிக்கப்பட்ட குழந்தையின் உடல்நிலை திடீரென கடந்த நான்கு மாதங்களாக பலவீனமடைய தொடங்கியதாகவும், குழந்தை எப்போதும் அமைதியாக இருப்பதையும் கவனித்த பெற்றோர், ஏதோ தவறு நடப்பதாக சந்தேகித்தனர். இது தொடர்பாக மருத்துவர்களிடம் சென்று காண்பித்தபோது, குழந்தைக்கு குடலில் வீக்கத்தைக் கண்டறிந்தனர். இதனையடுத்து என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய பெற்றோர்கள் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்த முடிவு செய்தனர்.

அதன்பின்னர் பெற்றோர்கள் சிசிடிவி கேமரா பதிவுகளைப் பார்த்தபோது, ​​நான்கு மாதங்களுக்கு முன்பு தங்கள் குழந்தையைப் பராமரிக்க வேலைக்கு அமர்த்தப்பட்ட குழந்தை பராமரிப்பாளர் அடிக்கடி தங்கள் குழந்தையை அடிப்பதைக் கண்டறிந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE