வங்கி மேலாளர் கொல்லப்பட்ட 14-வது நாளில் தீவிரவாதி சுட்டுக் கொலை: பாதுகாப்புப்படை அதிரடி!

By காமதேனு

காஷ்மீரில் வங்கி மேலாளரைச் சுட்டுக் கொன்ற தீவிரவாதி 14-வது நாளில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள காஞ்சியுலார் பகுதியில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

குல்காம் மாவட்டத்தில் கடந்த 2-ம் தேதி வங்கி மேலாளர் விஜயகுமார் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரைக் கொன்ற தீவிரவாதியான ஷோபியானைச் சேர்ந்த முகமது லோன் பாதுகாப்புப்படை தாக்குதலில் உயிரிழந்த இருவரில் ஒருவர் என காஷ்மீர் மண்டல காவல்துறை அதிகாரி விஜய் குமார் இன்று ட்விட் செய்துள்ளார்.
இதே போல மத்திய காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள பெமினாவில் பாதுகாப்புப் படையினருடன் நேற்று முன் தினம் இரவு நடந்த என்கவுன்டரில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த மோதலில் ஐந்து போலீஸார் காயமடைந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE