2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியர்களுக்கான விசா தடையை நீக்கியது சீனா!

By காமதேனு

கரோனா தொற்று பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியிருந்த சீனா, தற்போது மீண்டும் விசா வழங்க தொடங்கியுள்ளது.

இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம், நவம்பர் 2020 முதல் விசா வழங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி, ஜூன் 13 முதல் சீன விசாக் கொள்கையைப் புதுப்பித்தது. இதனைத் தொடர்ந்து சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இப்போது இந்தியர்கள் சீன விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்டுள்ள விசா கொள்கைகள் காரணமாக சீன நிறுவனங்களில் படிக்கும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் விசா கோரிக்கைகளை சீனா செயல்படுத்தி வருகிறது. தற்போது அவர்கள் தங்கள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மீண்டும் சேர விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அதுபோல தொழில் நிமித்தமாக இந்தியாவில் இருந்து சீனா செல்வோர் மற்றும் சீனாவில் இருந்து இந்தியா திரும்புவோருக்கும் இனி தடையின்றி விசாக்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE